வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (11:17 IST)

லெஸ்பியனாக மாறிய பிக்பாஸ் ஸ்ருதி... பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானவர் ஸ்ருதி. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படங்ககளில் நடித்து வருகிறார். 
 
தற்போது அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில்  தயாரியாகியுள்ள 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'.என்ற படத்தில் லெஸ்பியனாக ஸ்ருதி நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படம் ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகும். 
இப்படத்தில் சுருதி பெரியசாமி உடன்  நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.