செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (10:56 IST)

ஒரு லட்சத்து 31 ஆயிரம் கோடி; திமுக சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை..!

திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை இன்று வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அந்த பட்டியலை வெளியிட்டார். 
 
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் வீடியோ ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் முழுவதுமாக வெளியிடப்பட்டது. இதில் ஜெகத்ரட்சகன், எவ வேலு, கேஎன் நேரு, கனிமொழி 830 கோடி, கலாநிதி மாறன், டிஆர் பாலு,  கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, பொன்முடி, திமுக, அன்பில் மகேஷ், உதயநிதி, சபரீசன், செந்தில் பாலாஜி ஆகியவர்களின் சொத்துக்கள் எவ்வளவு என்பது குறித்த தகவல் உள்ளது. 
 
மொத்தம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி சொத்துக்களை திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்கள் வைத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் இந்த வீடியோ பாகம் ஒன்றுதான் என்றும் பாகம் 2 மிக விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களை வைரல் ஆகி வருகிறது. 
 
மேலும் திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலில் உள்ள முழு விபரங்களை www.enmannenenmakkal.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
 
Edited by Siva