திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (11:22 IST)

பேரவைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள்: என்ன காரணம்?

black mask
பேரவைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள்: என்ன காரணம்?
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரிக்கும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கருப்பு முக கவசம் அணியப்படுகிறது என அதிமுக விளக்கம் அளித்துள்ளது. 
 
சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி மக்கள் பிரச்சனையை எழுப்பும்போது ஊடகங்களுக்கு பேரவையின் நேரலை ஒளிபரப்பை வழங்காமல் ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் போக்கை கண்டித்தும் மக்களை அச்சுறுத்தும் உருமாறிய ஒமைக்கிறான் வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் விடியா அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும் கருப்பு மாஸ்க் அணிந்து வந்ததாக தெரிவித்துள்ளனர். 
 
மேலும் ஆளும் திமுகவினர் செய்யும் குற்றச்செயலை ஒருதலை பட்சமாக காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்யும் அரசின் விரோத போக்கை கண்டித்தும் கருப்பு முகக்கவசம் அணியப்படுகிறது என அதிமுக விளக்கம் அளித்துள்ளது.
 
 
 
Edited by Mahendran