வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (09:39 IST)

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டி நிலவரங்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகம் தொடங்கியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 63 ஆயிரத்து 528 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 10 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி கிட்டத்தட்ட சமநிலையில் தொடங்கி உள்ளதால் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ஏறவும் இறங்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக பங்குச்சந்தை இறங்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனால் அதே நேரத்தில் சென்செக்ஸ் 53 ஆயிரத்து 500 க்கு மேல் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே நல்ல லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva