1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. share market sensex and nifty status today

2 நாள் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றதில் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைந்து வந்தனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்று ஏற்றம் கண்டுள்ளது.
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 63355 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 47 புள்ளிகள் உயர்ந்து 18,864 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
பங்குச்சந்தை இடையிடையே சரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.44000க்கு நெருங்கியது..!