தொடர்புடைய செய்திகள்
- பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- மீண்டும் உச்சம் சென்ற பங்குச்சந்தை: சென்செக்ஸ் 63 ஆயிரத்தை தாண்டியதால் மகிழ்ச்சி..!
- வாரத்தின் முதல் நாளே உயர்ந்தது பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி,..!
- பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ் , நிப்டி நிலவரம்..!
- மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 63,000ஐ தாண்டியதால் மகிழ்ச்சி..!
நேற்றைய சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் சந்தோஷம்..!
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் 63 ஆயிரத்தை தாண்டி சென்செக்ஸ் வர்த்தகம் ஆகி வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 290 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 18,789 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்கு சந்தை நேற்று சிறிய அளவில் சரிந்தாலும் இன்று ஓரளவுக்கு உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
இந்த நிலையில் பங்குச்சந்தை ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்து தகுந்த ஆலோசனை பெற்று நல்ல நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva
