திடீரென சுமார் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: புதன், 4 செப்டம்பர் 2024 (09:59 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்து சில நாட்களாக பெரிய அளவில் ஏற்ற, இறக்கமில்லாமல் இருந்த நிலையில் இன்று திடீரென சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் செக்ஸ் 460 புள்ளிகள் குறைந்து 82,101 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை ஆனால் நிஃப்டி 144 புள்ளிகள் குறைந்து 25,130 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. திடீரென இன்று பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் இனிவரும் நாட்களில் பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கையை முதலீட்டு ஆலோசகர்கள் கொடுத்து வருகின்றனர். 
 
இன்றைய பங்குச்சந்தையில் மணப்புரம் கோல்டு, நாட்கோ பார்மா, சவுத் வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் உள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி ஆகிய பங்குகள் இறக்கத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

3வது முறையாக ஜனநாயகன் படம் பார்க்கும் விஜய்!.. அப்படி என்ன ஃபீலிங்!..

ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

அடுத்த கட்டுரையில்