Daily Horoscope
✕

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய நிப்டி , சென்செக்ஸ் நிலவரம்..!

Written By Siva
Updated: வெள்ளி, 21 ஜூன் 2024 (12:18 IST)
பங்குச்சந்தை  கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை உயர்வில் தான் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று காலை பங்கு சந்தை சரிந்தாலும் மாலை மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று திடீரென பங்குச்சந்தை குறைந்துள்ளது. இன்றைய பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 190 புள்ளிகள் குறைந்து 77 ஆயிரத்து 288 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 28 புள்ளிகள் குறைந்து 23 ஆயிரத்து 539 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், ஹெசிஎல் டெக்னாலஜி, இண்டஸ் இண்ட் வங்கி, இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வாங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments