மீண்டும் ரூ.59,000 என உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 29 அக்டோபர் 2024 (10:04 IST)
தங்கம் விலை நேற்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் 59 ஆயிரம் என விற்பனையாகி வருவது நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று மட்டும் சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 60 ரூபாயும் ஒரு சவரனுக்கு 480 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,375 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து ரூபாய்  59,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,880  எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..

மீனாட்சி அம்மன் தகோயிலுக்கு சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிவு

சீமானை விமர்சித்த பிஸ்மி மீது வழக்குப்பதிவு!.. நீதிமன்றம் அதிரடி...

உங்க கொசுப்படை சூப்பர்!.. நானும் ஃபாலோ பண்றேன்!.. ஈரானை பாராட்டும் புதின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments