செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2024 (09:23 IST)

என் ஜாதகம் சரியில்லை என்று சொல்லி தயாரிப்பாளர் நிராகரித்தார்… வித்யா பாலன் ஆதங்கம்!

பாலிவுட்டின் முன்னணி நடிகையான  வித்யா பாலன் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 19 ஆண்டுகளைக் கடந்துள்ளார். ஆனால் அவர் முதலில் சினிமா வாய்ப்புகளை தேடியது தமிழ் சினிமாவில்தான். ஆனால் அப்போது அவரை ராசியில்லாத நடிகை என தவிர்த்துவிட்டனர்.

இது பற்றி முன்னர் ஒரு நேர்காணலில் பேசிய அவர் “ரன், மனசெல்லாம் போன்ற படங்களுக்கெல்லாம் டெஸ்ட் ஷூட்டுக்கு சென்றேன். ஆனால் நிராகரிக்கப்பட்டேன். அப்போது என் இதயமே நொறுங்கியது போல தோன்றியது. அதற்கு பிறகு ஹிந்தியில் அறிமுகம் ஆனேன். ஹிந்தி சினிமா எனக்கு நல்ல கெரியரை வழங்கியது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் அவர் தனக்கான வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் எப்படியெல்லாம் பறிபோகின என்பது பற்றி பேசியுள்ளார். அதில் “நான் ஒரு படத்தில் தேர்வாகி சில நாட்கள் நடித்தும் விட்டேன். ஆனால் திடீரென்று அந்த தயாரிப்பாளர் என் ஜாதகம் சரியில்லை என்று என்னை நீக்கிவிட்டார். அவருக்கு எப்படி என் ஜாதகம் கிடைத்தது என்று தெரியவில்லை. ஏனென்றால் என் பிறந்த தேதி, நேரம் ஆகிய எதுவும் அவருக்கு தெரியாது” எனக் கூறியுள்ளார்.