Daily Horoscope

இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம்.. வெள்ளி விலை என்ன?

Written By Siva
Updated: புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:55 IST)
இன்று ஒரே நாளில் ஒரு சவரன் 400 ரூபாய் தங்கம் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பட்ஜெட்டில் வரிகுறைப்பு அறிவிப்புக்கு பின் தங்கம் விலை குறைந்தாலும் சமீப காலமாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது என்பதும் ஒரு சவரன் 53 ஆயிரத்தை தாண்டி 54 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் 50 ரூபாயும் ஒரு சவரன் 400 ரூபாயும் தங்கம் விலை உயர்ந்தது உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,710 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 53,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,165 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 92.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  92,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments