Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

Written By Siva
Updated: புதன், 15 மே 2024 (10:41 IST)
அட்சய திருதியை தினத்தில் தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்த நிலையில் அதன் பிறகு தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு சவரனுக்கு தங்கம் விலை ரூ.280 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,725 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 53,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,195  எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

குவிந்த திமுகவினர்!. திருச்சி நோக்கி யூடர்ன் போட்ட போலீஸ்!.. செம டிவிஸ்ட்!..

ரஜினிக்காக விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!.. தர்மன் அப்டேட்!..

எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: தவெக

வைகோ புத்தக வெளியீட்டு விழாவில்ர் ராகுல் காந்தியுடன் தவெக அமைச்சர்... இந்தியா கூட்டணியில் இணைய வாய்ப்பா?

ஆணவம் அழிவுக்கு கொண்டுசெல்லும்!.. பாசிசத்துக்கு விழுந்த அடி!.. ஸ்டாலின் கமெண்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments