1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (10:26 IST)

இன்று ஒரே நாளில் படுவீழ்ச்சி அடைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

gold
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மீண்டும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிந்து உள்ளதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை தற்காலிகமாக சரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் விலை இன்னும் அதிகமாக உயரும் என்றும் குறிப்பாக ஒரு கிராம் 6 ஆயிரம் என்றும் 2025 இல் ஒரு கிராம் பத்தாயிரம் என்றும் விற்பனையாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து ரூபாய் 5245.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 சரிந்து ரூபாய் 41960.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5607.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44856.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் சரிந்து ரூபாய் 71.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva