மீண்டும் உயர்ந்த தங்கம் விலை –உச்சத்தைத் தொட்டது !
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து ஒரு பவுன் விலை 31,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் என்ற செய்தி வெளியானதால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் பின் லேசாக குறைந்த தங்கத்தின் விலை இப்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகமாகி வருவதும் முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதுமே என சொல்லப்படுகிறது.
இதையடுத்து சென்னையில் நேற்று ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்து ரூ.31 ஆயிரத்து 184-க்கு விற்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விற்பனை 20 சதவீதம் குறைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.