ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா... என்ன பெயர் தெரியுமா?
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒரு பட்டபெயரை வைத்துள்ளார்.
தேர்தல் கூட்டணிக்கு ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இருவரிடமுமே தேமுதிக பேரம் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. தேமுதிக திமுகவிடம் பேரம் பேசியதை வெட்டவெளிச்சமாக்கியவர் நம் திமுக பொருளாளர் துரைமுருகன். இதனால் தேமுதிகவிற்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரும் டேமேஜ் ஆகிப்போனது.
இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் பிரேமலதா. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது பேசிய பிரேமலதா அமைச்சரை குட்கா புகழ் விஜயபாஸ்கர் என ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் அவருக்கு ஒரு புது பெயர் வைத்திருக்கிறோம். அது என்னவென்றால் குறை சொல்லும் புகழ்பெற்ற ஸ்டாலின் என கூறினார்.
அமைச்சரை குட்கா புகழ் விஜயபாஸ்கர் என பிரேமலதா கூறியதால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.