வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (15:11 IST)

விஜய்சேதுபதியோடு போட்டிபோடும் டிடிவி: எதில் தெரியுமா?

டிடிவி தினகரனின் கிப்ட் பாக்ஸ் சின்னம் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் என்ற பிரபலமில்லாத சின்னத்தை பெற்று இரட்டை இலை , உதயசூரியன் என்ற இரண்டு சின்னங்களையும் தோற்கடித்து சாதனை செய்தவர் டிடிவி தினகரன். குறிப்பாக குக்கரிடம் உதயசூரியன் தனது டெபாசிட்டை இழந்தது. அந்த ராசியான குக்கர் சின்னத்தை வரும் தேர்தலிலும் பயன்படுத்த தினகரன் எடுத்த சட்டப்போராட்டம் தோல்வி அடைந்தது.
 
இந்த நிலையில் தனக்கு பொதுச்சின்னமாவது வழங்க வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கை நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டதால் அவருக்கு 'பரிசுப்பெட்டி' என்ற பொது சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. சின்னம் வெளியானது முதலே பரிசுபெட்டி ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
 
இன்று விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம் டிவிட்டரில் டிரெண்டாகி வரும் நிலையில், தற்போது டிடிவியின் பரிசுப்பெட்டி சின்னமும் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.