புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (08:01 IST)

டிடிவிக்கு சின்னம் ஒதுக்குதல் –அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு !

பொதுச்சின்னம் ஒதுக்கும் பணியில் தேர்தல் ஆணையமே ஈடுபடும் என்றும் மாவட்ட அதிகாரிகள் ஈடுபட தேவையில்லை என்றும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குக் கொடுக்க வேண்டுமென அமமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக்கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அமமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்கவேண்டும் என்றும் தங்கள் கட்சியான அமமுகவுக்கு குக்கர் அல்லது ஏதேனும் ஒரு பொது சின்னத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக கண்டித்ததோடு தினகரன் கட்சிக்கு ஒரு பொது சின்னத்தை ஒதுக்க சொல்லி தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது. ஆனால் அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் தினகரன் தரப்பு வேட்பாளர்களுக்கு, சுயேட்சைகளுக்கான சின்னம் தற்போது ஒதுக்க வேண்டாம் எனவும், தேர்தல் ஆணையமே இதுகுறித்து இறுதி முடிவெடுக்கும் எனவும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைப் பத்திரிக்கையாளர்களிடம் அவர் உறுதிப் படுத்தினார்.