தேமுதிக சார்பில் விருப்ப மனு..! தொடங்கி வைத்த பிரேமலதா..!!
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு தேமுதிக சார்பில் இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மக்களவை தேர்தலில் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை. கூட்டணி குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் என இரண்டு நாட்களாக விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா, கழக நிர்வாகிகளுக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.