1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (20:58 IST)

தேர்தல் விதிமீறல்..! பிரேமலதா மீது தேர்தல் அதிகாரி பரபரப்பு புகார்.!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. 
 
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி வழங்க டோக்கன் வழங்கியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மீது புகார் எழுந்துள்ளது.   தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளதாகவும், பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.