1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:29 IST)

ராஜ்யசபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி.! தேமுதிக நிபந்தனை..! பேச்சுவார்த்தையில் இழுபறி..!

premalatha vijaynakanth
ராஜ்யசபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுமுனையில் அதிமுகவும், பாஜகவும் பாமக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
 
pemalatha
தேமுதிக நிபந்தனை:
 
அதிமுக சார்பில் தேமுதிகவுடன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பாஜக தரப்பில், துணைத் தலைவர் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.


admk bjp
மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்க வேண்டும் என்று பாஜகவுக்கு தேமுதிக நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்புக்கும் அதே நிபந்தனை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டுமென்ற தேமுதிகவின் நிபந்தனையால், கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. 


தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும், அதிமுகவும் தீவிரம் காட்டி வருவதால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேமுதிகவின் நிபந்தனையை எந்த கட்சிகள் ஏற்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே பிரேமலதா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது..