1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (17:46 IST)

மொத்தமாக பாஜக கூட்டணியில் இணைந்த அரசியல் கட்சிகள்.. அதிமுக கடும் அதிர்ச்சி..!

பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்தால் தங்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்த நிலையில் தற்போது ஒரு கட்சி கூட அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வரவில்லை என்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது. 
 
மாறாக பாஜக கூட்டணியில் இணைய கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் முடிவு செய்துவிட்டதாகவும் முதல் கட்ட பேச்சு வார்த்தையை ரகசியமாக முடிவடைந்து அடுத்த கட்டமாக எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்ற பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.  
 
பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, அதிமுக ஓபிஎஸ் பிரிவு, தேமுதிக, புதிய தமிழகம், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேனி, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரக்கோணம், ஆரணி ஆகிய தொகுதிகளில் போட்டியிட அமமுக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதற்கு கிட்டத்தட்ட பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
 பாஜக கூட்டணியில் அரசியல் கட்சிகள் இணைய குவிந்து வரும் நிலையில் அதிமுக ஒரே ஒரு இஸ்லாமிய அமைப்பு மட்டுமே இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran