1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: மதுரை , வியாழன், 21 மார்ச் 2024 (08:18 IST)

அதிமுகவின் உரிமை குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் - ஆர்.பி.உதயக்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்:
 
கடந்த தேர்தலில் தேனி தொகுதி மாபெரும் வெற்றி பெற்றது அதை போன்று இந்த முறையும் வி.டி.நாராயணசாமியை வேட்பாளராக அறிவிக்க ப்பட்டுள்ளார் அவரை வெற்றி பெற வைக்க சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதியில் உள்ள நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.,
 
திமுகவின் மக்கள் விரோத போக்கு, தற்போது போதை பொருட்களின் கேந்திரமாக தமிழ்நாடு மாறி உள்ளது அதை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்ல உள்ளோம்,மௌன சாமியாராக முதல்வர் உள்ளார்.
 
வெள்ள பாதிப்பில் கூட மத்திய அரசிடமிருந்து பெற கூடிய நிதியை 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தும் கூட அவர்களால் பெறமுடியவில்லை.
 
அவர்களுடைய கையாளாகாத தனம் உரிமையை பெற கூடிய போர் குணம் கூட திமுகவிடத்தில் மங்கி போய் உள்ளது என தெரிகிறது.,
 
அதே போன்று மத்திய அரசும் மற்ற மாநிலங்களில் கொடுக்கின்ற அணுகுமுறையும், தமிழ்நாட்டில் போதிய வளர்ச்சிக்கான நிதிகளும், திட்டங்களும் கொடுக்கவில்லையோ என்ற கவலை இருக்கிறது.
 
அதிமுக ஆட்சி காலத்தில் தான் 11 மருத்துவ கல்லூரிகளை பெற்றோம், எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றோம்.,
 
தற்போது இந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி பணிகள் பூஜ்யமாக உள்ளது மாநில அரசும் நம்மை வஞ்சிக்கிறது, மத்திய அரசும் நம்மை புறக்கணிக்கிறது., அதிமுக வின் உரிமை குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற உரிமை முழக்கத்திற்காக வெற்றி பெற வேண்டும்.
 
அதிமுக அனைத்து தரப்பு சார்ந்த வேட்பாளர்களை கொடுத்திருக்கிறார்கள், ஆனால் திமுகவை பொருத்தமட்டில் பழைய பார்த்த, மக்களால் வெறுக்கபட்டிருக்கிற, ஏற்கனவே மக்களால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிற வேட்பாளர்களாக தான் திமுகவின் வேட்பாளர் பட்டியல் பார்க்கப்படுகிறது.
 
அதிமுக தனித்து நின்றும் வெற்றி பெற்றுள்ளது, கூட்டணியாக நின்றும் வெற்றி பெற்றுள்ளது.
 
மக்களால் ஏற்றுக் கொள்ள கூடிய இந்த அதிமுக வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள்.
 
சின்னம் விவகாரத்தில் நீதியரசர்களும் தெளிவாக கூறியுள்ளனர்.
 
தேர்தல் ஆணையமும் தெளிவு படுத்தியுள்ளது, தேர்தல் நேரம் என்பதால் நாங்களும் அடக்கி வாசிக்கிறோம் இதற்கு மேல் எப்படி தெளிவு படுத்துவது என தெரியவில்லை.
 
பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தேர்தல் முடிந்தவுடன் சொல்கிறேன் என்றார்.