வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (15:49 IST)

மக்களவைத் தேர்தலில் திருச்சியில் போட்டியா?. துரை வைகோ பதில்..!

durai vaiko
மக்களவை தேர்தலில் திருச்சியில் போட்டியிடுவது குறித்து கூட்டணி தலைமை முடிவெடுக்கும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
 
மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.  
 
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, திமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் கூட்டணியின் சார்பில் தான் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.
 
மதவாத பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார். திமுக உடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முழு திருப்திக்கரமாக தான் நடந்தது என்றும் எங்கள் கட்சியில் ஒரு மக்களவை உறுப்பினரும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தற்போது கூடுதலாக ஒரு மக்களவைக்கு தொகுதியில் சீட்டு கேட்டு இருப்பதாக அவர் கூறினார். மேலும், திருச்சியில் நான் போட்டியிடுவது குறித்து எங்கள் கூட்டணி தலைமை முடிவெடுக்கும் என்று துரை வைகோ தெரிவித்தார்.

 
இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார் தவிர மற்ற அனைத்து கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றும் ஒரு சில மாநிலங்களில் சில கட்சிகள் இடையே முரண்பாடு இருக்கிறது, ஆனால் குறைந்தபட்ச புரிந்துணர்வுடன் தேர்தலை சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றும் துரை வைகோ குறிப்பிட்டார்