1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (13:33 IST)

4 = 40... கில்லி மாதிரி தேர்தல் கணக்கு போட்ட ராமதாஸ்!!

நாடாளுமன்ற முதர்கட்ட தேர்தல் 20 மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், அடுத்து இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு, 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. 
 
இந்நிலையில், பாமக தலைவர் ராமதாஸ் தேர்தல் குறித்து, கட்சி தொண்டர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தொண்டர்களுக்கு குறிப்பிட்டிருந்தது பின்வருமாறு, 
 
ஒட்டுமொத்த இந்தியாவின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் மக்களவை தேர்தல்கள் தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 91 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்திருக்கிறது. 
 
இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதை பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் மட்டுமின்றி, காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
 
40 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி நாம் விரைவாக முன்னேறுகிறோம். இந்த இரு தேர்தல்களுக்குமான பரப்புரை நிறைவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. 
 
அடுத்த 4 நாட்களுக்கு பாமகவினர் உட்பட அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும். 
 
அடுத்து வரும் 4 நாட்களுக்கான பணிகள் முக்கியமானவை. இதை உணர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கடுமையாகவும் கவனமாகவும் உழைத்தால் 40 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நமக்கே வெற்றி என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.