என் பெயரைக் காப்பாற்றுங்கள் : தொண்டர்களுக்கு ராமதாஸ் ’அட்வைஸ்’

ramadoss
Last Updated: ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (10:54 IST)
வரும் மக்களாட்சி தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாமக 7 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. நிச்சமாக வெற்றி பெற வேண்டும் என்று கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அக்கட்சித் தலைவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி முனிசாமி, இடைத்தேர்தல் நடக்கும் ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நிற்கும் ஜோதி பாலகிருஷ்ணன் ரெட்டி ஆகியோருக்கு ஆதரவாக ஓசூரில் பிரசாரம்  மேற்கொண்டார்.
 
அதில் அவர் கூறியதாவது:
 
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயமாக வெற்று பெறும்.மோடி அடுத்த பிரதமர் மோடி தான்.
 
தமிழகத்தில் திமுக  கட்சி இத்தேர்தலுடன் முடிவுக்கு வரும். 18 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெரும்.  மேலும் பாமகவினர் தீவிரமாக உழைத்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றியடையச் செய்வதுடன் என் பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்று தொண்டர்களிடன் கேட்டுக்கொண்டார்.


இதில் மேலும் படிக்கவும் :