பாமக மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்துகிறார்கள் - ராமதாஸ் குற்றச்சாட்டு

ramadoss
Last Updated: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (14:38 IST)
அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுக தலைமையில் பாமக, தமாக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. 
பாமக தலைவர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார்.
 
இவர் ஏற்கனவே திமுகவை வன்முறை கட்சி என்று தெரிவித்திருந்தார். தற்போது தனது பாமக கட்சி தொண்டர்களை வாக்கு சேகரிக்க விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
 
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியின் காரில் இருந்து 2 கோடி ரூபாய் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.
 

 
 


இதில் மேலும் படிக்கவும் :