வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2019 (11:37 IST)

பாமகவின் அடுத்த விக்கெட் காலி: கட்சியை விட்டு விலகிய துணை தலைவர்

பாமக - அதிமுக கூட்டணி பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர், பாமக மாநில துணைத் தலைவர் ரஞ்சித் ஆகியோர் விலகியதை அடுத்து தற்போது அக்கட்சியின் துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியுள்ளார். 
 
101% அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிட கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி மக்களவைத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்துள்ளது. 
 
இது மக்களுக்கு மட்டுமின்றி சொந்த கட்சியினருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், ஒரு சிலர் கட்சியை விட்டு விலகிய நிலையில் தற்போது பாமக துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியையும், எடப்பாடி பழனிச்சாமியையும் கேவலமாக விமர்சித்துவிட்டு இப்போது எப்படி அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என தெரியவில்லை. 
 
நானும் பாமகவிற்கு பிரச்சாரத்திற்கு சென்றேன் ஆனால் மக்கள் அனைவரும் இவர்களது கூட்டணி குறித்து கேவலமாக பேசுகிறார்கள். அதிமுக - பாமக கூட்டணி பேரக் கூட்டணி. அதிமுகவை எதிர்த்து பல புத்தங்களை வெளியிட்டு விட்டு, அந்த புத்தக்கத்தில் எழுதி இருப்பதற்கும் இப்போது பிரச்சாரத்தில் பேசுவதற்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.