வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (11:20 IST)

தேனியில் மொய்க்கும் ஸ்லீப்பர் செல்ஸ்: கலக்கத்தில் ஓபிஎஸ் தரப்பினர்

நாடளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் சமயத்தில் அதிருப்தியின் காரணமாக நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி மாறுவது வழக்கமானதுதான். 
 
ஆனால், இது அதிமுகவிற்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆம், கட்சி மாறி வந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிமுகவிற்கு எதிராக ஸ்லீப்பர் செல்களாக செயல்படுகிறார்களாம். 
 
குறிப்பாக தேனி மாவட்ட அதிமுகவில் இதுபோன்ற மாற்றுக் கட்சியினரின் வரவு அதிகமாக இருந்துள்ளது. இதை நினை முதலில் மார்தட்டிக்கொண்டாலும், அதன் விளைவுகளை இப்போதுதான் சந்திக்க துவங்கியுள்ளனர் அதிமுகவினர். 
கட்சியுடன் கலந்து அவர்களின் செயல்பாடு, நடவடிக்கை, திட்டங்கள் என அனைத்து விவரங்களையும் சேகரித்துகொண்டு, இந்த தகவலை தங்களது பழைய கட்சிக்கு தெரிவிக்கின்றனராம். இதனால் எதிரணி இவர்களை விட சூப்பராக திட்டமிட்டு செயல்படுத்துகின்றனராம். 
 
முதலில் இதை கண்டுகொள்ளாமல் விட்டத்தன் விளைவுகள் இப்போது இவர்களை வாட்டுகிறதாம். பின்னர்தான் இதற்கு கட்சியின் புது வரவுகள்தான் காரணம் என தெரிந்துக்கொண்டு, இப்போது அவர்களை களையெடுக்கும் பணியை துவங்கியுள்ளனர். 
 
அதுவும் தேனியில் இதுபோன்ற நடவடிக்கைகள் முதலில் அதிகமாக இருப்பதை கண்டுக்கொண்டதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தனது மகன் வெற்றிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் போல..