திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (19:03 IST)

வரலைன்னா திட்டுங்க, வந்தா விரட்டி அடிங்க: கடுப்பான தம்பிதுரை

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் ஊழல்களை ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினரின் ஊழல்களை எதிர்கட்சிகளும் சொல்லி மாறி மாறி குறை கூறி வருகின்றனர். 
 
இந்நிலையில் அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிக்கு சென்றார் அப்போது, அப்பகுதி மக்கள், நீங்க இரண்டு முறை எம்.பி-யாக இருந்த, எங்கள் ஊராட்சிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்னர்.
 
அதற்கு அவர் நான் ஒட்டு கேட்டு வரவில்லை, உங்கள் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றுவதற்காகத்தான் வந்திருக்கிறோம். வரலைன்னா ஏன் வரலைன்னு திட்டுறீங்க, வந்தால் விரட்டி அடிக்கிறீங்க. இப்போதுதான் வந்தியா, 4 வருஷம் கழித்து வந்தியான்னு கேட்டா நான் என்ன செய்வேன் என கடுப்பாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.