சிவகுமாரே தேவலாம் போல... செல்பி எடுத்த கட்சி தொண்டரை விரட்டி விரட்டி வெளுத்த நடிகர்!

Last Updated: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (10:29 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சார குரல் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கிறது. 
 
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடிகர் நடிகைகள் அரசியல் கட்சிக்காக பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. அந்த வகையில் விசாகப்பட்டினத்தில் சந்திரப்பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளருக்காக பிரபல நடிகர் பாலகிருஷ்ணா பிரச்சாரம் செய்தார். 
 
அவர் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்தது போது கட்சி தொண்டன் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றான். இதனால், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா அந்த தொண்டரை ஓட ஓட விரட்டி சென்று வெளுத்து எடுத்தார். 
இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர், இந்த பதிவை, எதிர் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் அதிகர் பரப்பி வைரலாக்கி வருகின்றனர். 
 
மேலும், பிரச்சாரத்தின் போதே இப்படியெல்லாம் சொந்த கட்சி தொண்டனையே விரட்டி விரட்டி அடிக்கும் போது இன்னும் ஆட்சிக்கு வந்தால் என்னவாகுமோ? என தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக பிரச்சார துடுப்பாக இதனை எதிர்கட்சியின் பயன்படுத்தினர். 
 
அங்குள்ள மக்கள் இதை பிரச்சார துடுப்பாக பயன்படுத்தினால், நம் தமிழக மக்களுடைய மைண்ட் வாய்ஸ், இதுக்கு சிவகுமார் எவ்வளோ மேல் போல... இவரு போன மட்டும்தான் தட்டிவிட்டாரு, அவரு ஆளயே போட்டி வெளுக்குறாரே என்று இருக்கும் போல...


இதில் மேலும் படிக்கவும் :