தேர்தல் செலவுக்காக புதிய வங்கி கணக்கு துவக்க வேண்டும்
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக புதிய வங்கி கணக்கு துவக்க வேண்டும் என்று கரூரில் தேர்தல் அலுவலர் அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை மற்றும் கரூர் தொகுதிகளில் முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற மூன்று லட்சத்து, 52 ஆயிரத்து 10 ருபாய் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து மாட்ட ஆட்சியர் அன்பழகனிடம் ஒப்படைத்தனர். குளித்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படைநடத்திய வாகன சோதனையில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 210 ருபாயும், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பாளையம் பகுதியில் நடத்தி வாகன சோதனையில் ஒரு லட்சத்து ஆறுபதாயிரம் ருபாய் முறையயான ஆவன இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையை முறையான ஆவணங்களில் தணிக்கை குழுவிடம் சமர்ப்பித்து திரும்ப பெற்று கொள்ளலாம் என்றார்.