திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (16:40 IST)

கூட்டணி கட்சிகளுக்கே 20 போயிருச்சு! என்ன செய்ய போகிறது திமுக?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு தொகுதிகள் பிரித்து கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 20 தொகுதிகள் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளது.
 
இதுவரை திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 10, விசிகவுக்கு 2, மதிமுகவுக்கு 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, ஐஜேகே கட்சிக்கு 1 என மொத்தம் 19 தொகுதிகளை கொடுத்துவிட்டது. தமாக திமுக கூட்டணிக்கு வந்தால் அதற்கும் ஒரு தொகுதி கொடுக்க வேண்டும். எனவே 40ல் 20 போக திமுக வரும் பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும்.
 
ஒருவேளை தேமுதிக, திமுக கூட்டணிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 2 தொகுதிகளை வாங்கி தன்னிடமிருந்து 3 தொகுதிகளை கொடுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 23 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு சென்றுவிடும். திமுக வெறும் 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடக்கூடும். இந்த 17ல் எத்தனை வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்