திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (18:14 IST)

ஜெயலலிதா அமைத்தது போல் வலுவான கூட்டணி அமைப்போம்: தம்பிதுரை

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தது போல் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என்றும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அதுபோல் பிஜேபிக்கும் ஒரு கொள்கை உண்டு. கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார்.



கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பாளையம், உள் வீரராக்கியம், சின்னமநாயக்கன்பட்டி முடக்குச்சாலை, பாலராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை மக்களவை துணை சபாநாயகரும், கரூர் எம்.பி யுமான தம்பித்துரை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தது போல் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அதுபோல் பிஜேபிக்கும் ஒரு கொள்கை உண்டு, கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும்., எங்களைப் பொறுத்தவரை பொது எதிரி காங்கிரஸ் திமுகவை வீழ்த்த வேண்டும். 18 ஆண்டுகள் மத்தியிலும் பதினோரு ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக காலத்தில்தான் கச்சத்தீவு விவகாரம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் நடந்தது. இதனை ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறினார்.


மேலும் தமிழர்களுக்கு துரோகம் செய்த இவர்களை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி பொறுப்புக்கு வர விடமாட்டோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் ஏர் மேக்சிஸ் ஊழல் போன்றவற்றுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி பிஜேபி இடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தோம் என்று கூறினார்.

சி.ஆனந்தகுமார்