வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2019 (10:42 IST)

ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு ரூ.500: பணப்பட்டுவாடாவை தொடக்கிய கனிமொழி

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை 'திருமங்கலம்' தேர்தலில் அறிமுகம் செய்ததே திமுக தான் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று அந்த கலாச்சாரத்தை அனைத்து கட்சிகளும் கடைபிடித்து வருகின்றன. என்னதான் தேர்தல் ஆணையமும் சமூக ஆர்வலர்களும் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தி வந்தாலும் தமிழகத்தில் இனி பணம் கொடுக்காமல் ஓட்டு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இதுவரை ராஜ்யசபா எம்பியாக இருந்த திமுக தலைவர் முக ஸ்டாலினின் சகோதரி கனிமொழி தற்போது முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவர் கடந்த பல மாதங்களாக தூத்துகுடியை வட்டமிட்டு வருவதால் அந்த தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது
 
இந்த நிலையில் சமீபத்தில் தூத்துகுடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கனிமொழி கலந்து கொள்ள வந்திருந்தபோது அவருக்கு பெண்கள் ஆர்த்தி எடுத்தனர். அப்போது ஆர்த்தி எடுத்த ஒவ்வொரு பெண்ணுக்கு ரூ.500 வழங்கப்பட்டது.

இதனையடுத்து பாராளுமன்ற தேர்தலுக்கான பணப்பட்டுவாடாவை திமுக தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது