வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (12:59 IST)

தமாகாவிற்கு சைக்கிள் சின்னம் தரமுடியாது!!! உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

தமிழ் மாநில காங்கிரஸிற்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
 
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் தன்சாவூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறது. தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன் என்பவர் போட்டியிட இருக்கிறார்.
 
இந்நிலையில் தமாகா தங்களுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கேட்டிருந்தது. குறைந்தது 2 தொகுதியில் போட்டியிட்டால் தான் சைக்கிள் சின்னம் தர முடியும் என்ற நிபந்தனையை தமாகா பின்பற்றவில்லை என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் இந்த நிபந்தனைக்கு தடை விதிக்க முடியாது. ஆதலால் தமாகாவிற்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் தமாகா நிரந்தர சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.