வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 மார்ச் 2019 (18:45 IST)

அயோத்தி மத்தியஸ்தம் விவகாரம் : நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அயோத்தி வழக்கில் சர்சைக்குறிய நிலத்தை  3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பாக நாளை உச்சநீதிமன்றம் திர்ப்பளிக்கிறது செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அதே சர்ச்சைக்குரிய இடத்தை 3 தரப்பினருக்கு சமமாக ஒதுக்கி 2010 ல் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சமரச பேச்சு வார்த்தையில் இஸ்லாமிய  அமைப்புகள், இந்து அமைப்புகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அயோத்தி விவகாரத்தில் மஸ்தியர்கள் மூலம் தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. 
 
அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்தன. மேலும் அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் நாளை காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்ற சாசன அமர்வு இதுகுறித்து தீர்ப்பளிக்கிறது.