வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (17:13 IST)

காய் வாங்க காசில்ல; டெபாசிட் பணத்தில் இருந்து ரூ.500 உறுவிய மனைவி: ஏமாந்து போன சுயேட்சை வேட்பாளர்!

சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சேர்த்து வைத்த காசில் இருந்து மனைவி பணத்தை எடுத்ததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். 
 
சுயேச்சை வேட்பாளராக களம் இறங்க திட்டமிட்டிருந்தார் விழுப்புரத்தை சேர்ந்த அரசன். இதற்காக டெபாசிட் தொகை ரூ.12,500-ஐ சேர்த்து வைத்திருந்தார். இந்த பணத்தை எடுத்துக்கொண்டு வேட்பௌமனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சென்றார். 
 
அங்கு போய் சான்றிதழ்களை சமர்ப்பித்து, டெபாசிட் தொகையை கொடுத்துள்ளார். ஆனால், அந்த பணத்தில் 500 ரூபாய் குறைவாக இருந்துள்ளது. இதனால், அவரால் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவில்லை. 
 
இதன் பின்னர் வீட்டுக்கு சென்று மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போதுதான் அந்த பணத்திலிருந்து காய் வாங்கி அவர்து மனைவி 500 ரூபாயை எடுத்ததாக தெரிவித்துள்ளார். சேர்த்து வைத்த பணத்தில் இருந்து ரூ.500-ஐ எடுத்ததால், அவரது தேர்தல் கனவு களைந்தது.