200வது முறையாக போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்

man
Last Modified புதன், 20 மார்ச் 2019 (10:29 IST)
நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் போட்டில்யிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சில கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. நேற்று திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நேற்றுமுதல் ஆரம்பமானது.
 
இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் தேர்தல் அதிகாரி மலர்விழியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சுவாரஸ்யம் என்னவென்றால் பத்மராஜன் ஜனாதிபதி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் 199 முறை போட்டியிட்டுள்ளார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் 200வது முறையாக போட்டியிட இருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :