புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:34 IST)

ஹீரோவாக அறிமுகமாகும் முகின் ராவ்வின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வரும் அக்டோபர் நான்காம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் நடிக்கவிருக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது

ஸ்ரீடி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருக்கும் முதல் திரைப்படமான இந்த படத்தின் கதாநாயகனாக முகின் நடிக்க உள்ளார். இந்த படத்தை அஞ்சனா அலிகான் என்பவர் இயக்க இருப்பதாகவும் இது இவரது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ’வெப்பம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்

இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வெற்றி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். ஷீர்டி ப்ரோடுக்க்ஷன் படத்தை தயாரிக்கின்றனர்.