வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:12 IST)

சூர்யாவின் அடுத்த நான்கு படங்கள்…? இது மட்டும் நடந்தால் மார்க்கெட் எகிறும்!

சூர்யா அடுத்ததாக நடிக்கவுள்ள நான்கு படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சூரரைப் போற்று படத்தை அடுத்து சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் அதற்கடுத்து சூர்யா வரிசையாக நடிக்கவுள்ள படங்கள் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வாடிவாசலுக்கு அடுத்து கல்வி பற்றிய படம் ஒன்றில் நடிக்கிறார் சூர்யா. இதைக் கூட்டத்தில் ஒருவன் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

அதற்கடுத்து பாண்டிராஜ் இயக்கும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் குடும்ப படத்தில் நடிக்கிறார். அதற்கடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிக்கிறாராம். கடந்த சில ஆண்டுகளாக ஹிட் கிடைக்காமல் இருக்கும் சூர்யாவுக்கு இந்த படங்கள் எல்லாம் அமைந்தால் மீண்டும் அவர் மார்க்கெட் பல மடங்கு உயரும் என சொல்லப்படுகிறது.