பிரபாஸின் "ராதே ஷ்யாம்" படத்தின் ரொமான்டிக் போஸ்டர்!

Papiksha Joseph| Last Modified வெள்ளி, 23 அக்டோபர் 2020 (16:46 IST)

நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தின் புதிய மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே பிரேரனா என்ற கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று படத்தின் ஹீரோ பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படக்குழுவினர் புதிய ரொமான்டிக் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்ளுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளனர். தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகும் இப்படம் பாகுபலிக்கு பிறகு சாதனை படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :