40 வருஷ ரகசியம்! மேடையில் ரஜினியை பற்றி பேசி அழ வைத்த டிஆர்
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டத்தில் அவர்களின் படங்களுக்கு இணையாக தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர். பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவரின் படங்களில் பெரும்பாலும் டி.ஆர் தான் கதை, திரைக்கதை, வசனம், பாடல், மியூஸிக். அதனால்தான் அவரை இந்த சினிமாவின் பன்முக கலைஞன் என்று அழைப்பார்கள்.
கோர்வையான தன்னுடைய பேச்சுக்களால் மேடையையே சிரிப்பலையாக மாற்றக் கூடிய திறமை அவருக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய பாடல்களாகட்டும், இசையாகட்டும் தகிட தகிட என கோர்வையான வரிகளால் ஈஸியாக மக்களுடன் கனெக்ட் ஆகிவிடுவார். தற்போது அவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாடல்கள் பாடுவது, ஒரு சீனில் நடிப்பது என வந்து வந்து போகிறார்.
வீட்டில் முழுவதுமாக ஓய்வில் தான் இருக்கிறார் டி.ராஜேந்தர். இந்த நிலையில் சமீபத்தில் பாக்யராஜ் 50வது ஆண்டுவிழா நடந்தது. தமிழ் சினிமாவிற்கு பாக்யராஜ் வந்து 50 வருடங்கள் ஆன நிலையில் அவருக்கு விழா எடுத்து கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஜினி ,இளையராஜா என மூத்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அதில் டி.ஆர் மேடையில் பேசும் போது ரஜினியை பற்றி பிரமிப்பாக கூறினார். தன்னுடைய முதல் படமான உயிருள்ளவரை உஷா படத்தில் ரஜினியைத்தான் நடிக்க வைக்க நினைத்தாராம் டி.ஆர். ஆனால் சூழ் நிலை காரணமாக அது நடக்காமல் போய்விட்டதாம். ஒரு வேளை நடந்திருந்தால் அவர் நடைக்கு ஒரு பாடல் என இதுவரை யாரும் போடாத பாடலை நான் போட்டிருப்பேன் என்று கூறினார்.
மேலும் அவருக்கு உடல் நிலை மோசமாகி அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்ட போது எந்த டாக்டர்கள் பார்க்கிறார்கள், என்ன மாதிரியான சிகிச்சை போகிறது என்பதை பற்றி நாள் தோறும் டி.ஆரின் மனைவிக்கு போன் மூலம் பேசி தெரிந்து கொண்டு ஆறுதலை சொன்னது என் அம்மா லதா அம்மாதான் என லதா ரஜினிகாந்தை பற்றி கூறி மேடையில் உள்ளவர்களையும் சேர்த்து அழ வைத்தார் டி.ஆர்.