புதன், 18 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: சனி, 17 ஜனவரி 2026 (12:24 IST)

‘படையப்பா’ டைம்ல ரஜினிக்கு உதவியா இருந்த அந்த நடிகர்! அதான் படம் சூப்பர் ஹிட்

‘படையப்பா’ டைம்ல ரஜினிக்கு உதவியா இருந்த அந்த நடிகர்! அதான் படம் சூப்பர் ஹிட்
நேற்று பாக்யராஜுக்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சினிமாத்துறைக்கு அவர் வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருடைய மனைவியின் வற்புறுத்தலின் பேரில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு ரஜினி,  எஸ் பி முத்துராமன், டி ராஜேந்திரன், பார்த்திபன், அரசியல் பிரமுகர்கள் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்போது ரஜினி மேடைக்கு வந்து பாக்யராஜுக்கு தங்க சங்கிலி நினைவு பரிசாக அவர் கழுத்தில் போட்டார்.
 
அதோடு கேக் வெட்டி அந்த விழாவை அற்புதமாக கொண்டாடினார்கள். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ரஜினிகாந்த் மேடையில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகின்றது. திரைக்கதை மன்னன் பாக்யராஜ். ஆனால் அவருக்கு உண்டான அங்கீகாரம், மரியாதை, பணம், புகழ் என எதுவுமே அவருக்கு கிடைக்கவில்லை என்று தான் நான் சொல்வேன். அது மட்டுமல்ல அவர் நிஜ வாழ்க்கையில் சரியாக இல்லை என்று தான் சொல்வேன்.
 
ஏனெனில் அவருடைய பெரும்பாலான நேரத்தை அவருடைய படைப்புகளுக்கும் கதைகளுக்குத்தான் செலவழித்துக் கொண்டார். நிஜ வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதும் சொத்துக்களை சம்பாதிப்பது என்ற எண்ணம் கூட இல்லாமல் வாழ்ந்து விட்டார். அவருடைய நிறைய திரைக்கதைகள் ஹிந்தியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதற்காக அவர் காப்பிரைட்ஸ் கூட வாங்கவில்லை. அப்படி வாங்கி இருந்தால் இன்று எத்தனையோ பங்களா வீடு சொத்து என வாங்கி இருப்பார்.
 
ஆனால் அவர் பணத்தின் மீது துளி ஆசை கூட படவில்லை. எனக்கு படங்களில் சினிமாக்களில் எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் பாக்யராஜிடம் தான் கேட்பேன். அப்படித்தான் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் பற்றி அவரிடம் விவாதித்தேன். பாக்யராஜை பொறுத்த வரைக்கும் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் தலைசிறந்தவர். அப்படிப்பட்ட படங்களில் ஹீரோயிசத்தையும் கொண்டு வருவார்.
‘படையப்பா’ டைம்ல ரஜினிக்கு உதவியா இருந்த அந்த நடிகர்! அதான் படம் சூப்பர் ஹிட்
 
அப்படித்தான் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டருக்காக அவரிடம் ஒரு ஆலோசனை நடத்தினேன். அவர் நீலாம்பரி கேரக்டரை மட்டும் நீங்கள் சரியாக அமைத்து விட்டால் இந்த படம் வேற லெவலில் இருக்கும். அதனால் அதை கவனமாக கையாளுங்கள் என்று எனக்கு அறிவுரை கூறினார் .அதன்படி அந்த கேரக்டரும் சரி அந்தப் படமும் சரி பெரிய அளவில் ரீச் ஆனது. அதேபோல பாபா படத்திற்கும் அவரிடம் தான் ஆலோசனை கேட்டேன் .
 
அப்போது பாக்யராஜ் என்னிடம் சொன்னது என்னவெனில், ஆன்மீகம் இருக்கிறது ஆனால் அது உங்களுக்கு சரியாக இருக்கும். நீங்கள் ஆன்மீகத்தை எந்த அளவுக்கு ஃபாலோ செய்கிறீர்களோ அப்படியே உங்களுடைய ரசிகர்களும் இருப்பார்களா என்று சொல்ல முடியாது .அதனால் இந்த படம் கமர்சியலாக போகுமா? போகாதா என்பது பற்றியும் நம்மால் யூகிக்க முடியாது என்று கூறினார். ஆக பாக்யராஜ் சரியாக ஒரு படத்தை கணிப்பார் என்றும் ரஜினி கூறினார்.