புதன், 18 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Updated : திங்கள், 19 ஜனவரி 2026 (14:54 IST)

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

ar rahman
மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கியவர் ஏ.ஆர்.ரகுமான். இந்த படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடல் பட்டிதொட்டியெகும் கேட்டது. இந்த பாடலுக்காக ரகுமானுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
தொடர்ந்து காதலன், ஜென்டில்மேன், ஜீன்ஸ், இந்தியன் என பல படங்களிலும் ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த இசை இளைஞர்களை வசீகரித்தது.

ஏ.ஆர் ரகுமானின் சினிமா வரவால் இளையராஜாவின் மவுசும் குறைந்து போனது. ஏ.ஆ.ரஹ்மானின் இசைக்காக ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உருவானது. ஒரு பக்கம் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்தார் ரஹ்மான். அப்படி அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு இரண்டு ஆஸ்கார் விருதுகளும் கிடைத்தது.

தற்போது ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ராமாயணா என்கிற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் இந்த படம் பற்றி பேசிய ஏ.ஆர் ரஹ்மான் ‘நான் ஒரு இஸ்லாமியர்.. ஜிம்மர் ஒரு யூதர்.. ராமாயணம் இந்து மதம் சார்ந்தது.. நாங்கள் இருவரும் இந்த படத்திற்காக சேர்ந்து இசையமைப்பது பெருமையாக இருக்கிறது..

இது குறித்து பலர் கேள்வி எழுப்பலாம்.. ஆனால் நான் பிராமண பள்ளியில் படித்தவன்.. எனக்கு ராமாயணம் மிகவும் பரிச்சயமான கதை.. லட்சியம், ஒழுக்கம் பற்றிய கதை அது.. நல்லவர்கள், கெட்டவர்கள், அரசர், யாசகர் என யாரிடமிருந்தும் அறிவை பெற்றாலும் அது விலைமதிப்பற்று என ஒரு தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறார்.. அதற்கு வெட்கப்பட தேவையில்லை.. குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.. அப்போதுதான் பிரகாசிக்க முடியும்’ என பொங்கியிருக்கிறார்.