விஜய்சேதுபதியை அவமதிக்கின்றதா மாஸ்டர் படக்குழு? அதிர்ச்சி தகவல்

திங்கள், 27 ஜனவரி 2020 (21:15 IST)
தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆவதற்கு முன்பே பல கண்டிஷன்கள் விஜய்சேதுபதி போட்டதாகவும் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் எந்த ஒரு காட்சியும் போஸ்டரும் இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது
 
விஜய் சேதுபதியின் கண்டிஷன் மற்றும் அவர் கேட்ட அதிகமான சம்பளம் ஆகியவற்றுக்கு ஒப்புக் கொண்டுதான் அவரை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் நேற்று வெளியான மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரில் விஜய் சேதுபதியை விட விஜய் சற்று உயரமாக இருப்பதாகவும் அதிக ஆக்ரோஷத்துடன் இருப்பதாக இந்த போஸ்டரை கூர்ந்து கவனித்த சிலர் குற்றம் சாட்டுகின்றனர் 
 
இந்த குற்றச்சாட்டை போஸ்டரை டிசைன் செய்தவர்களும் இதனை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில்தான் இந்த போஸ்டரை வடிவமைத்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து விஜய்யை விட ஒரு சிறு அளவு விஜய் சேதுபதியை குறைத்து காட்டவும் படக்குழுவினர் கூறியிருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது
 
அதே போல் படத்திலும் விஜய் சேதுபதியின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டாலும், ஒருசில காட்சிகள் கடைசி நேரத்தில் கட் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் விஜய்சேதுபதி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

சாதிச்சிட்டீங்க: ஆர்.ஜே.பாலாஜிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

பிரைவேட் ஜெட் வேண்டாம்!. அல்லு அர்ஜூன் காட்டும் எளிமை.. தயாரிப்பாளர் ஷாக்!...

வேள்பாரிக்கு முன்பு ஒரு பக்கா ஆக்‌ஷன் படம்!.. ஷங்கர் போடும் பிளான்!..

என் உண்மையான பேரு அர்ஜூன் இல்ல!.. ஆக்‌ஷன் கிங் சொன்ன பிளாஷ்பேக்!..

Arasan: அரசன் ஷூட்டிங் நடக்குதா இல்லையா?.. புது அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments