திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஜனவரி 2020 (18:23 IST)

’தளபதி 65’ படத்தை இயக்குவது யார்? புதிய தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது
 
இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என தெரிகிறது. இதனை அடுத்து ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்க உள்ளதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தை தயாரிப்பது சன் பிக்சர்ஸ் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி தற்போது மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது.
 
‘தளபதி 65’ படத்தை இயக்க கிட்டத்தட்ட பத்து இயக்குனர்கள் வரிசையில் இருந்தாலும் அவற்றில் தற்போது இரண்டு பேராக விஜய் குறைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஒருவர் இயக்குனர் பேரரசு என்றும் இன்னொருவர் கோமாளி இயக்குநர் பிரதீப் என்றும் கூறப்படுகிறது இந்த இருவரில் ஒருவருக்கு ’தளபதி 65’ படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒருசில தினங்களில் விஜய் இந்த இருவரில் யார் அவரது அடுத்த படத்தை இயக்குவது என்பதை முடிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது