1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (17:30 IST)

‘மாஸ்டர்’ படத்தின் அட்டகாசமான லுக்: விஜய், விஜய்சேதுபதி மிரட்டல்

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது
 
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் மூன்றாவதுலுக் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது.
 
இந்த லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் அட்டகாசமான போஸில் உள்ளனர். இந்த போஸ்டரில் இருந்தே இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் விஜய், விஜய்சேதுபதி இருவரும் போதும் ஆக்ஷன் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது