Daily Horoscope
✕

பாஜகவில் சிக்கப் போகும் அந்த பிரபல நடிகர் யார்? அதிர்ச்சி தகவல்

Written By siva
Updated: வியாழன், 10 செப்டம்பர் 2020 (14:54 IST)
பாஜக தலைவராக எல் முருகன் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அவர் பல திரையுலகினர்களை கட்சிக்குள் இழுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் அவர் சிவகார்த்திகேயனை இழுக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் சிவகார்த்திகேயன் பாஜக வலையில் விழாமல் தப்பிக்க கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பாஜகவின் வலையில் பல பிரபல நடிகர்களை விழவைக்க முயற்சி நடந்து கொண்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ’தமிழ் தமிழ்’ என்று பேசும் பிரபல நடிகர் ஒருவர் தற்போது இந்த வலையில் சிக்கி உள்ளதாகவும் அதேபோல் முன்னணி ஆக்சன் ஹீரோ ஒருவரும் மிகப் பெரிய தொகை ஒன்றை பெற்றுக் கொண்டு பாஜகவில் சேர சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது 
 
இருவருமே சொந்தப்படம் எடுத்து கையை சுட்டு கொண்டவர்கள் என்பதும் ஏராளமான கடன் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கடன்கள் மொத்தத்தையும் ஒரே செக்கில் அடைத்து விடுவதாக வாக்குறுதி அளித்துள்ளதை அடுத்து இருவரும் பாஜகவில் சேர உள்ளதாக ஒரு வதந்தி அரசியல் வட்டாரத்திலும் திரையுலக வட்டாரத்திலும் பரவி வருகிறது
 
இது வதந்தியாகவே இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் ஆசையாக உள்ளது. இருப்பினும் இந்த வதந்தி உண்மை ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

எல்லாம் காட்டு

2026ம் வருடத்தில் அதிக வசூல்!.. ஜெயிலர் 2 செய்த சாதனை!..

14 ஆண்டுகளுக்கு முந்தைய தற்கொலை வழக்கு: பிரபல நடிகைக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்!

Jailer 2 Box Office: நான்கே நாட்களில் ரூ.424 கோடி... ரூ.600 கோடியை நோக்கி ஜெயிலர் 2

வசூல் மன்னன் என நிரூபித்த ரஜினி!.. 500 கோடியை நெருங்கும் ஜெயிலர் 2...

இசையமைப்பாளர் தேவா உடல் அடக்கம்.. சொந்த ஊரில் முழு அரசு மரியாதை.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments