1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (12:00 IST)

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் காலம் வரும் - காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து பாஜகவை தமிழகத்தில் வளர்ப்பதில் அவர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக திரையுலக நட்சத்திரங்களை பாஜகவுக்கு இழுப்பதிலும், மாற்றுக் கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் எம்பிக்களை இழுப்பதிலும், அவர் ஓரளவுக்கு வெற்றி பெற்று வருகிறார் என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் பாஜக கொஞ்சம் கூடுதல் செல்வாக்கை பெற்றுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என்றும் தமிழக சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் முதல் முறையாக இடம் பெறுவார்கள் என்றும், பாஜக ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் தமிழக பாஜக தலைவர்கள் அவ்வப்போது கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது
 
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் காலம் விரைவில் வரும் என காயத்ரி ரகுராம் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சி எப்படி அமையும் என்பதை விரைவில் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் இருந்தால் பாஜகவில் சேரலாம் என்று அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாஜகவில் சிவகார்த்திகேயன் சேரவிருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் திடீரென சிவகார்த்திகேயன் குறித்து காயத்ரி ரகுராம் கூறியிருப்பது பெரும் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது