உச்ச நட்சத்திரத்தை கலாய்த்தாரா தயாரிப்பாளர்?

CM| Last Updated: சனி, 2 ஜூன் 2018 (11:09 IST)
ஒரு தயாரிப்பாளர் போட்ட ட்வீட், உச்ச நட்சத்திரத்தைக் கலாய்ப்பது போல இருந்ததாகக் கருதுகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.
 
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்க்க நேற்று தூத்துக்குடி சென்ற உச்ச நட்சத்திரம், அவமானப்பட்டுத் திரும்பினார். அதுமட்டுமில்லாமல், தேவையில்லாமல் வாயை விட்டு மாட்டிக் கொண்டார்.
 
இந்நிலையில், இரண்டெழுத்து இனிஷியல் கொண்ட தயாரிப்பாளர் ஒருவர், “யாரும் மக்கள் பிரச்னைக்கு போராடாதீங்கப்பா... 80 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு எடுக்க கடுமையா போராடுங்கப்பா...” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
‘போராட்டங்கள் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்’ என உச்ச நட்சத்திரம் சொன்ன ஸ்டேட்மெண்டைக் கலாய்த்து அவர் இந்த ட்வீட் செய்திருப்பதாக அவருடைய ரசிகர்கள் கருதுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :